போப் பிரான்சிஸை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி; முழு ஆதரவை வழங்குவதாக இத்தாலி உறுதி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரோம் சென்று, போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலி நாட்டின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி - போப் பிரான்சிஸ் சந்திப்பு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வத்திக்கானில் போப் பிரான்சிஸுடன் நேரில் சந்தித்து இன்று (சனிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினார்.
வத்திக்கானில் போப் பிரான்சிஸ் (Pope Francis) மற்றும் ஜெலென்ஸ்கி இடையே 40 நிமிட சந்திப்பு நடைபெற்றது. இருவரும் உக்ரைனின் நடக்கும் போரினால் தூண்டப்பட்ட மனிதாபிமான மற்றும் அரசியல் சூழ்நிலை பற்றி பேசியதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.
AP
இந்த உரையாடலின்போது, போர் முடிவுக்கு வர போப் தனது தொடர்ச்சியாக பிரார்த்தனை செய்வதாக உறுதியளித்தார்.
இத்தாலி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
போப் பிரான்சிஸை ஜெலென்ஸ்கி சந்திக்கும் போது, இத்தாலியின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா ((Sergio Mattarella) மற்றும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி Giorgia Meloni) ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
AP
அப்போது, உக்ரைனுக்கு முழு இராணுவ ஆதரவை வழங்குவதாக இத்தாலி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
மெட்டரெல்லா மற்றும் மெலோனி இருவரும் உக்ரைனுக்கு இராணுவம், நிதி, மனிதாபிமானம் மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால புனரமைப்பு உதவிகளின் அடிப்படையில் இத்தாலியின் முழு ஆதரவை வாங்குவதாக தெரிவித்தனர்.
AP