உக்ரைன் தலைநகரில் 900 சடலங்கள் கண்டெடுப்பு! ஜெலென்ஸ்கி அதிர்ச்சி தகவல்
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்ய துருப்புகளால் கொன்று குவிக்கப்பட்ட 900 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கீவ் மாகாணத்தில் 900 பேருடன் ஒரு வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால், கீவ் பகுதியைச் சுற்றி வெவ்வேறு வெகுஜன புதைகுழிகளில் கிட்டத்தட்ட 900 மக்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்ய இராணுவம் அதன் வான்வழி தாக்குதல் மூலம் சென்ற வியாழனன்று 3 ஏவுகணைகளை கீவ் மாகாணத்தை தாக்கியது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் வருகை தந்திருந்த நிலையிலும் ரஷ்யர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜெலென்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தை நெருங்கிவிட்ட ரஷ்ய படையினர்!
இந்த ஏவுகணைகள் கீவ் ஒப்லாஸ்ட்டின் ஃபாஸ்டிவ் நகருக்கு அருகில் உள்ள அறியப்படாத உள்கட்டமைப்பு தளங்களை தாக்கியதாக கிய்வ் ஒப்லாஸ்ட் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஒலெக்சாண்டர் பாவ்லியுக் தெரிவித்தார்.
ஜேர்மனியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற திருவிழா!
பிப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷ்யா ஒரு "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" தொடங்கியது. இது தேவையற்ற போர் என்று மேற்கு நாடுகள் கூறியது. இதன் விளைவாக, மேற்கத்திய நாடுகளும் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.