அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி
ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளரும் தீவிர வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் படுகொலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு பங்கிருப்பதாக அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே குற்றஞ்சாட்டியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் மீதும்
சார்லி கிர்க்கின் படுகொலை மட்டுமின்றி, கடந்த ஆண்டு டொனல்ட் ட்ரம்ப் மீதும் இப்படியான ஒரு படுகொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், குறித்த தகவலானது ரஷ்ய அரசுக்கு சொந்தமான TASS என்ற நாளேட்டிலேயே வெளிவந்துள்ளது. உக்ரைனின் 133வது நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான Artem Dmitruk என்பவரே, சார்லி கிர்க் படுகொலையில் ஜனாதிபதி ஜெலென்கியின் பங்கு குறித்து குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
மேலும், கருத்தியல் ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சார்லி கிர் படுகொலையிலும் ட்ரம்ப் மீதான கொலை முயற்சியிலும் ஜெலென்ஸ்கியின் பங்கு தொடர்பில் தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
மட்டுமின்றி, சாதாரண குடிமக்கள் முதல் அமெரிக்க ஜனாதிபதி வரையில் யாரை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் வலுவான அமைப்பு உக்ரைன் நிர்வாகத்தின் கீழ் இயங்குவதாகவும் Dmitruk வெளிப்படுத்தியுள்ளார்.
சார்லி கிர்க்கின் படுகொலைக்கு பின்னர் உக்ரைன் நிர்வாகத்தின் பேரமைதியே இதற்கு சான்று என்றும், உக்ரைன் அளித்த ஒப்புதலின் பேரிலேயே சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகிறது என்றார்.
சார்லி கிர்க் படுகொலை
செப்டம்பர் 10ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியின் போது சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டர். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்குவதை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் சார்லி கிர்க்.
செப்டம்பர் 11ம் திகதி சார்லி கிர்க் படுகொலை தொடர்பில் 22 வயதான டைலர் ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ராபின்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ட்ரம்ப் கோரியிருந்தார்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது படுகொலை முயற்சியில் இருந்து ட்ரம்ப் நூலிழையில் தப்பியிருந்தார். மட்டுமின்றி, உக்ரைன் ஆதரவாளர் என கூறப்படும் நபர் ட்ரம்பின் புளோரிடா குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |