ரஷ்யா மீதானத் தாக்குதலை மூன்று மடங்காக அதிகரிக்க ஜெலென்ஸ்கி உத்தரவு
Zelenskyy orders military to triple daily strikes: ரஷ்யா மீதான தினசரி தாக்குதல்களை மும்மடங்காக்குமாறு ஜெலென்ஸ்கி உத்தரவு.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி 1,648 நாட்கள் ஆன நிலையில், ராணுவத்திற்கு புதிய உத்தரவுகளை ஜெலென்ஸ்கி பிறப்பித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை நாளொன்றுக்கு 1,000 ஆக அதிகரிக்குமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஜெகென்ஸ்கி கூறியுள்ளார்.
தற்போது நாளொன்றிற்கு 300 ட்ரோன்கள் என தாக்குதலுக்குப் பயன்படுத்தும் நிலையில், இது மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை மாலை ஆற்றிய உரையில்,
இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும்: ஒரு உறுதியான இலக்கு உள்ளது, மேலும் இந்தப் பணியை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று அறிவித்தார்.
இதனிடையே, தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களால் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாத இறுதியில் ரஷ்யாவின் பெட்ரோல் உற்பத்தி உள்நாட்டு நுகர்வு அளவில் சுமார் 70 சதவீதமாகக் குறைந்தது.
ஜூலை மாத இறுதியில், சில உள்ளூர் அதிகாரிகள் எரிபொருள் விற்பனை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவோ அல்லது நீக்கவோ தொடங்கியதால் ஏற்பட்ட ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யப் பிராந்தியங்களில் மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில், வாகனங்களுக்கான பெட்ரோலை பெருமளவில் உற்பத்தி செய்யும் பெர்ம், நிஸ்னி நோவ்கோரோட் மற்றும் யாரோஸ்லாவ் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகள் உட்பட பல முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் அவற்றின் செயல்பாடுகள் முடங்கின.
இந்த நிலையில், வரவிருக்கும் குளிர்காலத்திற்குப் போதுமான அளவு, அதாவது 14.6 பில்லியன் கன மீற்றர் எரிவாயுவை நிலத்தடி சேமிப்பு நிலையங்களில் உக்ரைன் சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |