கோட் சூட் அணியாததற்காக தன்னை கேலி செய்த ஊடகவியலாளரை பழிக்குப் பழி வாங்கிய ஜெலன்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த முறை அமெரிக்கா வந்திருந்தபோது, அவர் வெள்ளை மாளிகைக்கு கோட் சூட் அணியாமல் வந்ததற்காக அமெரிக்க ஊடகங்கள் சில அமெரிக்க ஊடகங்கள் கேலி செய்தன.
பழிக்குப் பழி வாங்கிய ஜெலன்ஸ்கி
இந்நிலையில், நேற்று ஜெலன்ஸ்கியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர்.
இருவரும் ஊடகவியலாளர்களை சந்திக்கும்போது, ஒரு ஊடகவியலாளர், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அவர்களே, நீங்கள் கோட் சூட்டில் பார்க்க அருமையாக இருக்கிறீர்கள் என்றார்.
உடனே, நானும் அதைத்தான் சொன்னேன் என்று கூறிய ட்ரம்ப், ஜெலன்ஸ்கியிடம், அந்த ஊடகவியலாளர்தான் கடந்த முறை கோட் சூட் அணியாததற்காக உங்களை தாக்கியவர் என்றும் கூற, ஜெலன்ஸ்கி சிரித்துக்கொண்டே, எனக்கு நினைவிருக்கிறது என்றார்.
உடனடியாக அந்த ஊடகவியலாளர் மன்னிப்புக் கேட்க, அப்போதும் விடவில்லை ஜெலன்ஸ்கி. நீங்கள் கடந்த முறை அணிந்த அதே சூட்டை அணிந்திருக்கிறீர்கள். பாருங்கள், நான் மாறிவிட்டேன், ஆனால், நீங்கள் மாறவில்லை என்று கூற, ட்ரம்பும் அந்த அறையிலிருந்த மற்றவர்களும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |