பயங்கரவாத நாடான ரஷ்யா என்ன செய்யக்கூடும் - வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைனில் Energy அமைப்பை தயார்படுத்துவதற்கான விரிவான திட்டம் என்பதில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆண்டனி பிளிங்கன் திடீர் பயணம்
ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்காவும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவிக்கப்படாத பயணமாக உக்ரைன் விரைந்துள்ளார்.
AP
அவர் இராணுவ உதவியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் உக்ரைனில் Staff கூட்டத்தை ஜெலென்ஸ்கி நடத்தியுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் பதிவு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்றைய ஊழியர் கூட்டத்தில் குளிர்காலத்திற்கு நம் Energy அமைப்பை தயார்படுத்துவதற்கான விரிவான திட்டம் மற்றும் பயங்கரவாத நாடான ரஷ்யா என்ன செய்யக்கூடும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
நமக்கு நிறைய வேலைகள் உள்ளன, ஒவ்வொருவருக்கும் குறிப்பிடத்தக்க அறிவுறுத்தல்கள் மற்றும் காலக்கெடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்' என தெரிவித்துள்ளார்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |