வெளியேறிய ஜோ பைடன்... ஜெலென்ஸ்கியின் திட்டத்திற்கு கடும் பின்னடைவு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய திட்டமொன்றை முன்வைக்க தயாராகி வந்த நிலையில், ஜேர்மனியில் நடக்கவிருந்த சந்திப்பானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
புயல் தொடர்பான நடவடிக்கை
ஜேர்மனியில் நான்கு நாள் பயணம் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தற்போது மில்டன் புயல் காரணமாக பயணத்தை ரத்து செய்துள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் தொடர்பான நடவடிக்கைகளை கவனிக்க ஜனாதிபதி அனைத்து பயணங்களையும் ரத்து செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை புளோரிடாவில் மில்டன் புயல் கரையைக் கடக்கிறது. ஆனால் ஜோ பைடன் கலந்துகொள்ளாததால், திட்டமிட்ட மாநாடு எவ்வாறு பாதிக்கப்படும் என்பதில் விளக்கமளிக்கப்படவில்லை.
முதல் முறையாக உலகத் தலைவர்கள் ஒன்று கூடி உக்ரைன் தொடர்பில் விவாதிக்க முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது ஜோ பைடனின் பயணத் திட்டம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என ஜேர்மன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 நாடுகளின் தலைவர்கள்
பிரித்தானியா பிரதமர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உட்பட மொத்தம் 20 நாடுகளின் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்றே ஜேர்மனி தெரிவித்திருந்தது.
இந்த மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சிறப்பு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட இருந்தது. தற்போது ஜோ பைடன் மில்டன் புயல் காரணமாக பயணத்தை ரத்து செய்துள்ளதால், மாநாடு முன்னெடுக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |