மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரை தொடங்கி விட்டதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புடின் மூன்றாம் உலக போரை தொடங்கிவிட்டார்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தொடங்கி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளை நிறைவடைய உள்ள நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போருக்கான விதையை தூவி விட்டார் என தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கி பேட்டி
ஜெலென்ஸ்கி பிபிசிக்கு அளித்த பேட்டியில், மூன்றாம் உலக போர் என்பது எதிர்காலத்தில் நடைபெறும் ஒன்று இல்லை, அது ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இது உக்ரைன், ரஷ்யா இடையிலான பிரச்சனை மட்டுமல்ல, இது உலக அளவிலான பிரச்சனையின் ஆரம்ப நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த போரானது மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருப்பதற்கு உக்ரைன் வீரர்களின் துணிச்சல் மட்டும் தான் காரணம் என்றும், உக்ரைனின் பாதுகாப்பு என்பது உக்ரைன் நாட்டின் இறையாண்மை சார்ந்தது மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக நாடுகளின் பாதுகாப்புடன் தொடர்புடையது என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த போர் உலக அளவிலான போராக மாறுவதை தடுக்க வேண்டும் என்றால், புடினை உக்ரைனிய மண்ணிலேயே வீழ்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |