பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திக்கிறாரா ஜெலென்ஸ்கி? வெளியான முக்கிய தகவல்
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் ஏற்பட்ட கடினமான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் லண்டன் சுற்றுப்பயணம்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட கசப்பான பேச்சுவார்த்தைக்கு பிறகு, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
டவுனிங் தெருவிற்கு வந்தடைந்த ஜெலென்ஸ்கி பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருடன் தனிப்பட்ட சந்திப்பில் ஈடுபட்டார்.
ஜெலென்ஸ்கியின் வருகையை முன்னிட்டு வைட் ஹாலில் இருந்து ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பு திரும்பியபோது வெளியே கூடியிருந்த கூட்டத்தினர் பலத்த ஆரவாரம் எழுப்பினர்.
பிரித்தானிய மன்னருடன் சந்திப்பு
இந்நிலையில் வெளியான செய்திகளின் அடிப்படையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாளை பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திப்பார் என தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பானது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்காக லண்டனில் கூடும் நாளில் நடைபெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |