ஒரே போட்டியில் 1000 ஓட்டங்கள்; டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜிம்பாப்வே
zimbabwe record 1st team score 500+ runs in 2 innings: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 இன்னிங்ஸிலும் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்த முதல் நாடு என்ற சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே சாதனை
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
Brendan Taylor மற்றும் Brian Bennett ன் சதத்தால், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 504 ஓட்டங்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில், Sediqullah Atal, Rahmanullah, Rahmat Shah ஆகிய மூவரும் சதம் விளாச ஆப்கானிஸ்தான் அணி 514 ஓட்டங்கள் குவித்தது.
அதன்பின்னர், 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே Craig Ervineவின் இரட்டை சதம் மற்றும் Wesley Madhevereவின் சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 523 ஓட்டங்கள் குவித்துள்ளது.

போட்டி சமனில் முடிந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 இன்னிங்ஸிலும் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது.