வெளிநாட்டில் விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் மற்றும் மகன்
தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச் சுரங்கம் அருகே தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய கோடீஸ்வரர் மற்றும் அவரது மகன் உட்பட 6 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய விமானம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. RioZim என்ற நிறுவனத்தின் உரிமையாளரான Harpal Randhawa என்பவரும் அவரது மகனுமே விபத்தில் சிக்கி கொல்லப்பட்டவர்கள்.
@reuters
RioZim பல்வகைப்பட்ட சுரங்க நிறுவனமாகும். தங்கம் மற்றும் நிலக்கரி உற்பத்தி அத்துடன் நிக்கல் மற்றும் செம்பு சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள மாஷாவா பகுதியிலேயே விமான விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் போது RioZim நிறுவனத்தின் Cessna 206 என்ற விமானம் ஹராரேயிலிருந்து முரோவா வைரச் சுரங்கத்திற்குச் சென்று கொண்டிருந்தது என கூறப்படுகிறது.
ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த விமானம் முரோவா வைர சுரங்கம் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது. மேலும், முரோவா வைர சுரங்கமானது RioZim நிறுவனத்திற்கும் உரிமை இருப்பதாகவே கூறப்படுகிறது.
4 பில்லியன் டொலர்
நடு வானிலேயே விமானம் வெடித்ததாகவும், அதன் பின்னர் தரையில் விழுந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மரணமடைந்துள்ளனர்.
பலியானவர்களில் 4 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் மற்ற இருவர் ஜிம்பாப்வேயை சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான GEM ஹோல்டிங்ஸின் நிறுவனர் ஆவார். இவருடன் மரணமடைந்த மகனுக்கு 22 வயது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |