ரூ.2000 நோட்டுகள் குவியலில் சோகமான Zomato ஊழியர்! ஒரே ஒரு டுவிட்டர் பதிவால் சிக்கல்
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ, தனது ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது.
2000 நோட்டுக்கு தடை
இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இதனை தொடர்ந்து ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, திரும்ப பெறுவதற்காக 4 மாத கால அவகாசம் தருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
@twitter
இந்நிலையில் சோமேட்டோ நிறுவனம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, எங்களது நிறுவனத்தில் கேஷ் ஆன் டெலிவரி முறையை பயன்படுத்தி உணவினை ஆர்டர் செய்யுங்கள் என ட்விட்டரில் பதிவு செய்திருந்திருந்தது.
இந்த பதிவிற்கு பின்னர் வழக்கமாக சோமேட்டாவில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவதற்கு பதிலாக கேஷ் ஆன் டெலிவரியை பயன்படுத்தி வருகின்றனர்.
கலாய்க்கும் நெட்டிசன்கள்
இதனால் சோமேட்டோ நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பாரிய அளவில் ஆர்டர்கள் குவிகின்றன. ஆனால் கிடைக்கும் ஆர்டர்கள் அனைத்திற்குமே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாகவே கிடைத்துள்ளது.
@twitter
வெறும் 200, 300 ரூபாய் ஆர்டர்களுக்கு 2000 நோட்டுகளை கொடுப்பதால், டெலிவரிக்கு வரும் ஊழியர்கள் சில்லரை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று வரையில் மட்டும் சோமேட்டோ நிறுவனத்திற்கு, 72 சதவீத ஆர்டர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மையப்படுத்தியே வந்துள்ளது. இதனால் சில்லறை கொடுக்காமல் சோமேட்டோ நிறுவனம் விழி பிதுங்கி நிற்கிறது.
since friday, 72% of our cash on delivery orders were paid in ₹2000 notes pic.twitter.com/jO6a4F2iI7
— zomato (@zomato) May 22, 2023
எனவே தங்களது நிலையை உணர்த்தும் நிலையில் 2000 நோட்டு அடுக்கப்பட்ட படுக்கையில் சோமோட்டோ நிறுவன டெலிவரி ஊழியர் ஒருவர் சோகமாக படுத்திருப்பது போன்ற புகைப்படத்தை சோமேட்டோ தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் சோமேட்டோ நிறுவனத்தின் நிலையை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.