12 பபூன்களை கொன்று சிங்கங்களுக்கு உணவழித்த ஜேர்மன் உயிரியல் பூங்கா: சர்ச்சையான விவகாரம்!
ஜேர்மனியில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் பபூன்களை கொன்று சிங்கங்களுக்கு உணவாக அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பபூன்களை கொன்ற மிருகக்காட்சி சாலை ஊழியர்கள்
ஜேர்மனியில் உள்ள நியூரம்பெர்க் உயிரியல் பூங்காவில் 12 பபூன்களை கொன்று சிங்கங்களுக்கு உணவாக அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பபூன்களின் எண்ணிக்கை 40-ஐ தாண்டிய பிறகு கடந்த ஆண்டு பபூன்களை கொல்லும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட சில பபூன்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றவை மிருகக்காட்சி சாலையில் உள்ள மாமிச உண்ணி மிருகங்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு வந்த கொலை மிரட்டல்
இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரியல் பூங்கா வெளியே விலங்கு ஆர்வலர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பூங்கா மூடப்பட்ட பிறகு, சில ஆர்வலர்கள் வேலியில் ஏறிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 பபூன்கள் கொல்லப்பட்டதை அடுத்து மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை கொலையை நியாயப்படுத்திய இயக்குநர்
இந்நிலையில், பபூன்களை கொல்லும் திட்டத்தை மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், மிருகங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த அவற்றை கருத்தடை செய்து தனி வீடுகளில் வாழவைக்கும் முயற்சியில் தோல்வியில் முடிவடைந்தது.
நாங்கள் அனைத்து விலங்குகளையும் நேசிக்கிறோம், ஒவ்வொரு இனத்தை காப்பாற்ற முயற்சிக்கிறோம், ஆனால் குறிப்பிட்ட இனத்தில் மக்கள் தொகை பெரும் போது அவற்றை வைத்து இருக்க முடியாது என்று டாக்டர் டாக் என்கே தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கு பிறகு, கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாகவும், இதனால் ஊழியர்கள் மிகவும் பாதிக்கபபட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |