சிங்கத்தைக் கூண்டிலடைக்கும்போது வனவிலங்குகள் பூங்கா ஊழியருக்கு நேர்ந்த அசம்பாவிதம்
சிங்கம் ஒன்றைக் கூண்டிலடைக்கும்போது, வனவிலங்குகள் பூங்கா ஊழியர் ஒருவரை சிங்கம் தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளார்.
கழுத்தில் காயத்துடன் கண்டெடுக்கப்பட்ட ஊழியர்
ஜப்பானிலுள்ள Fukushimaவில் அமைந்துள்ள வனவிலங்குகள் பூங்கா ஒன்றில் நீண்ட காலமாக பணியாற்றிவந்தவர் Kenichi Kato.
அவர், கழுத்தில் காயத்துடன் சிங்கக் கூண்டில் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கம் ஒன்றை, இறைச்சியைக் காட்டி கூண்டில் அடைக்கும் முயற்சியின்போது, அவரை அந்த சிங்கம் தாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பொதுவாக ஒரு சிங்கக் கூண்டுக்குள் இறைச்சியுடன் செல்லும் ஊழியர்கள், கூண்டுக்குள் இறைச்சியை வைத்துவிட்டு, அங்கிருக்கும் ஒரு சிறு கதவுக்குப் பின்னால் சென்று, கதவைப் பூட்டிக்கொண்டு நின்றுகொள்வார்களாம்.
file image
ஆனால், இறைச்சியைக் காட்டி சிங்கத்தை கூண்டுக்குள் அடைக்க முயன்ற Kenichi Kato, அந்தக் கதவை மூட மறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வனவிலங்குகள் பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |