10,000-க்கும் மேற்பட்டோர் குழி தோண்டி புதைக்கப்பட்டதாக மரியுபோல் எம்.பி மதிப்பீடு! வெளியான ஆதாரம்
மரியுபோலுக்கு அருகே கண்டறியப்பட்ட 2வது பெரிய கல்லறையில் கிட்டதட்ட 10,000 பேர் புகைக்கப்பட்டிருக்கலாம் என எம்.பி மதிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மரியுபோலுக்கு அருகே உள்ள Vynohradne-ல் 2வது பெரிய கல்லறை இருக்கும் புதிய படங்களை Maxar டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புகைப்படம் வெளியானதை தொடர்ந்து, அங்கு புதைக்கப்பட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகமாக இருக்கலாம் என மரியுபோல் எம்.பி Dmytro Gurin தெரிவித்துள்ளார்.
மரியுபோலில் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை ரஷ்ய துருப்புகள் எங்கே எடுத்துச் செல்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது, தற்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது.
ரஷ்ய படைகளிடம் சிக்கிய மரியுபோல் நகரில் என்னுடைய பெற்றோர்கள் பல வாரங்கள் சிக்கியிருந்தனர், ஆனால் எப்படியோ அங்கிருந்து தப்பிவிட்டனர்.
புச்சாவை விட மரியுபோலில் அதிகமான கொடூரங்கள் நடந்திருக்கிறது. பல வாரங்களாக தொடர்ந்து ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகி வரும் மரியுபோலில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் மற்றும் மரணங்கள் குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ளது.
போர் எதிரொலி... பிரித்தானியாவில் சமையல் எண்ணெய் வாங்க மக்களுக்கு கட்டுப்பாடு!
சில பத்திரிச்கையாளர்கள் எப்படியோ நகருக்குள் நுழைந்துவிட்டனர், ஆனாலும் மரியுபோலில் என்ன நடக்கிறது என்பது முழுமையாக தெரிந்துக்கொள்வதில் சிக்கில் நிலவுகிறது.
எனினும், உள்ளூர் மற்றும் மற்றும் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் படி, நகரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தெரித்துள்ளனர் என மரியுபோல் எம்.பி Dmytro Gurin தெரிவித்துள்ளார்.