10 கோடி முறை பிரியாணி ஓர்டர்..,121 ஓர்டர்களை ஒரே நாளில் செய்தவர்: Zomatoவின் சுவாரஸ்ய தகவல்
2023 -ம் ஆண்டில் அதிகம் ஓர்டர் செய்த உணவுகள் குறித்து Zomato பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளது.
2023 -ம் ஆண்டு முடியும் நேரத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் பகிரப்பட்டு வருகின்றது. அந்தவகையில், Zomato நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் அதிகம் ஓர்டர் செய்த உணவுகள், வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் ஆகிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலத்தில் உணவை வீட்டில் இருந்து கொண்டே பெறுவதற்கு பல ஒன்லைன் செயலிகள் உள்ளது. அதில் Zomato தவிர்க்க முடியாத ஒன்று. இந்த நிறுவனத்தில் அறிமுக காலத்தில் 50 சதவீத தள்ளுபடி, 90 சதவீத தள்ளுபடி என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது.
ஒரு நாளில் 121 ஓர்டர்
மும்பையைச் சேர்ந்த ஹனீஸ் என்பவர் 2023 -ம் ஆண்டில் 3,580 உணவு ஓர்டர்களை செய்துள்ளார். குறிப்பாக ஒரு நாளைக்கு 9 முறை ஓர்டர் செய்துள்ளார்.
அதே போல, பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ஒரு நாளில் ரூ.46,273 -க்கு உணவு ஓர்டர் செய்துள்ளார். இதில் மும்பையை சேர்ந்த ஒருவர் ஒரு நாளில் மட்டுமே 121 ஓர்டர்களை செய்துள்ளார்
அதிக ஓர்டர் செய்யப்பட்ட உணவுகள்
Zomato -வில் 2023-ம் ஆண்டில் 10 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 615 பிரியாணி ஓர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரியாணியை வைத்து 8 Qutub Minars- ஐ நிறைத்து விடலாமாம்.
இதற்கு அடுத்ததாக 7,45,30,036 பீட்ஸா ஓர்டர் செய்யப்பட்டுள்ளது. இது 3 ஈடன் கார்டன் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் அளவாகும். மேலும், 4,55,55,490 நூடுல்ஸ் பவுல் ஓர்டர் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |