சிலிண்டர் விலை திடீரென ரூ.100 குறைப்பு.., பெண்களின் வாக்குகளை பெறுவதற்கு புதிய அறிவிப்பா?
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், வரும் தேர்தலை முன்னிட்டு சமையல் சிலிண்டர் வாயு குறையுமா என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு சிறப்பு பரிசு ஒன்றை மோடி அறிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு
இது தொடர்பாக மோடி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "இன்று சர்வதேச மகளிர் தினம். நமது அரசு எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க முடிவு செய்துள்ளது. இது லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை குறைக்கும்.
சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும்" என்றார்.
தேர்தலில் நெருங்கும் நேரத்தில் பெண்களின் வாக்குகளை பெறுவதற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |