ரத்த பூமியாக மாறும் உக்ரைன்! ரஷ்யா தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்த ராணுவ வீரர்கள்.. பதறவைக்கும் சம்பவம்
ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு போர் விமானங்களை அழித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை உக்ரைன் நாட்டின் விமான நிலையங்கள், வான்வெளி பாதுகாப்பு போன்றவற்றை அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதையடுத்து ரஷ்யாவுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் தஞ்சமடைந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து வெடித்து வரும் போரில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.