குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய்.. குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சமா? சீமான் ஆவேசம்
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பது தொடர்பாக சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மரணம்
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதில், தற்போது வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சீமான் பேசியது
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் மீது எனக்கு அனுதாபம் வரவில்லை. ஆத்திரம் தான் வருகிறது.
இந்த நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததற்கு தான் அதிக நிவாரணம் கொடுக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களை அரசு ஊக்குவிக்கிறது.
கள்ளச்சாராயம் குடிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீட்டுக்கு போனவன் ரூ.10 லட்சத்திற்காக மீண்டும் குடிக்கிறான்.
குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய், குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சமா" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |