விடுமுறைக்கு சென்றபோது 11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்! பெற்றோர் மீது கடும் விமர்சனம்
பிரேசிலில் 11 வயது சிறுமி பாறையில் இருந்து விழுந்து இறந்ததால், அவரது பெற்றோர் வெறுப்பு விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர்.
11 வயது சிறுமி
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பியான்கா சனெல்லா என்ற 11 வயது சிறுமி, தனது பெற்றோருடன் விடுமுறையை கழிக்க Cambara do Sul என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு உற்சாகமாக விளையாடிய சிறுமி பியான்கா, 20 அடி உயரத்தில் பாறையில் இருந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பணியைத் தொடங்கி மாலை 5.30 மணியளவில் சனெல்லாவின் உடலைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவரது பெற்றோர் தங்கள் இரு மகன்களுடன் Curitabaவுக்கு திரும்பினர். பின்னர் சனிக்கிழமையன்று சிறுமியின் உடல் நினைவுகூருதல் மற்றும் இறுதிச் சடங்குகள் நடந்தது.
வெறுப்பு நிறைந்த விமர்சனங்கள்
இதற்கிடையில், பெற்றோரின் அலட்சியமே சிறுமியின் இறப்பிற்கு காரணம் என வெறுப்பு நிறைந்த விமர்சனங்கள் எழுந்தன.
சிறுமி பியான்காவின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கரோலினா டோஸ் சாண்டோஸ், "தங்கள் மகளின் மரணத்திற்கு துக்கத்தில் இருக்கும் பெற்றோரைக் குறை கூறுவதற்குப் பதிலாக, அவர்களை ஆதரிக்க வேண்டும்" என பொதுமக்களிடம் அழைப்பு விடுத்தார்.
மேலும் அவர், "இந்த துயரத்தின் தருணத்தில், இந்தக் குடும்பத்திற்கு ஆழ்ந்த சோகம், பிரேசிலிய சமூகம் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். பியான்காவின் நினைவை மதிக்க வேண்டும். அவர் ஒரு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுமியாக முன்பு இருந்தார்" என இறுதிச்சடங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |