ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 11 வயது சிறுமியும், அவரது தந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு
உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 11 வயதான உக்ரேனிய சிறுமியும், அவரது தந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உக்ரைன் நாட்டு மக்கள் தங்களது உடைமைகளையும், இத்தனை நாள் வாழ்ந்த மண்ணையும் விட்டுவிட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மறுமுனையில் போரால் பல ராணுவ வீரர்களும் எளிய மக்களும் உயிரிழந்து வருகிறார்கள்.
@reuters
நகரெங்கும் குண்டு வெடிப்பு சத்தங்களும், எப்போதும் பாதுகாப்பு உணர்வோடு கையில் துப்பாக்கியுடன் நிற்கும் ராணுவ வீரர்களும், போரின் உக்கிரத்தால் அமைதியிழந்து வாழ்ந்து வருகின்றனர்.
@telegram
இந்த நிலையில் தென்கிழக்கு உக்ரைன் நகரில் உள்ள கட்டிடத்தின் மீது, இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.
தந்தையும், மகளும் உயிரிழப்பு
நேற்று இரவு உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான ஜபோரிஜியாவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் நகரிலுள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
@sky
மேலும் இடிந்த கட்டிடத்திற்குள் சிக்கிய 50 வயது மதிக்கத்தக்க தந்தையும்,11 வயதே நிரம்பிய மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இறந்தவரின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.
@sky
”சபிக்கப்பட்ட ரஷ்ய பயங்கரவாதிகள் மீண்டும் ஜபோரிஜியாவை தாக்கி மனித உயிர்களை வேட்டையாடுகின்றார்கள்” என நகர சபை செயலாளர் அனடோலி குர்தேவ்(Anatoliy Kurtev) டெலிகிராமில் பேசியுள்ளார்.
உக்ரைனின் மாநில அவசர சேவைகளின் தலைவரான செர்கி குரூக்(Serhiy Kruk) , "ரஷ்யா ஜபோரிஜியா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி மற்றொரு உக்ரேனிய குடும்பத்தை அழித்துள்ளது" என அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.