திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்! 12 பேர் உயிரிழப்பு
கடந்த ஆகத்து மாதம் வரையில் இந்த பகுதியில் 2115 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது
மெக்ஸிகோவில் விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
மெக்ஸிகோவின் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்துள்ளனர்.
கையில் துப்பாக்கிகளுடன் இருந்த அவர்கள், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 ஆண்கள், 6 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்கப்பட்ட காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
Photo: Representational/Reuters
இதற்கு முன்பாக தென்மேற்கு மெக்ஸிகோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் நடந்த மற்றோரு துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.