12,500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ஓநாய் மீண்டும் வந்த அதிசயம் - எலான் மஸ்க் வைத்த வேண்டுகோள்
பரிணாம வளர்ச்சி, இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு காரணங்களால், உலகம் தொடங்கிய காலத்தில் இருந்தே சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிவதும், புதிய உயிரினங்கள் தோன்றுவதும் நடைபெறுகிறது.
இதே போல், கிட்டத்தட்ட 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டைர் ஓநாய்(Dire Wolves) இனத்தை, மரபணு பொறியியல் மூலம் விஞ்ஞானிகள் மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர்.
மீண்டும் வந்த டைர் ஓநாய்
அமெரிக்காவின் டெக்சாஸை தளமாகக் கொண்டு செயல்படும் கொலோசல் பயோசயின்சஸ் என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம், அழிந்த உயிரினங்களை, மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் உள்ளது.
தற்போது, 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன 3 டைர் ஓநாய் இன குட்டிகளை உயிர்ப்பித்துள்ளனர்.
13,000 ஆண்டுகள் பழமையான பல் மற்றும் 72,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டிலிருந்து டிஎன்ஏவை எடுத்து ஆரோக்கியமான ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளனர்.
We’re Colossal Biosciences, the de-extinction company responsible for bringing back the first animals from extinction. Our dire wolf pups, Romulus and Remus, were born on October 1, 2024. Watch these pups grow up on our YouTube channel. Link in bio.
— Colossal Biosciences® (@colossal) April 7, 2025
These two wolves were… pic.twitter.com/hbk1wFQ3lf
கடந்த அக்டோபர் 1, 2024 அன்று 2 ஆண் குட்டிகளையும், ஜனவரி 30, 2025 அன்று 1 பெண் குட்டியையும் உருவாக்கியுள்ளனர்.
எலான் மஸ்க் வேண்டுகோள்
இந்த ஓநாய்கள் 2,000 ஏக்கர் பரப்பளவில், 10 அடி உயர வேலியால் சூழப்பட்ட இடத்தில் வசித்து வருகின்றன, அங்கு பாதுகாப்புப் பணியாளர்கள், ட்ரோன்கள் மற்றும் கேமரா மூலமாக இந்த ஓநாய் குட்டிகள் கண்காணிக்கப்படுகின்றன.
ஒரு காலத்தில், வட அமெரிக்காவில் சுற்றித் திரிந்த சிறந்த வேட்டையாடும் விலங்கான இந்த ஓநாய்கள், சாம்பல் ஓநாய்களை விட அளவில் பெரியவை மற்றும் சற்று அடர்த்தியான ரோமங்களையும் வலுவான தாடையையும் கொண்டுள்ளன.
இதே போல், கம்பளி மாமூத் குட்டிகளை உருவாக்கி தருமாறு, தொழிலதிபர் எலான் மஸ்க் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Please make a miniature pet wooly mammoth https://t.co/UxoIWmzq6h
— Elon Musk (@elonmusk) April 7, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |