சீனாவில் உள்ள பள்ளி விடுதியில் நள்ளிரவில் தீ விபத்து.., இதுவரை 13 மாணவர்கள் உயிரிழப்பு
சீனாவில் உள்ள பள்ளி விடுதி கட்டடத்தில் நேற்றிறவு ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி விடுதியில் தீ விபத்து
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள யான்ஷான்பு கிராமத்தில் இருக்கும் யிங்சாய் பள்ளி விடுதியில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் தீயை அணைக்க போராடினர்.
13 மாணவர்கள் மரணம்
ஆனால், இந்த தீ விபத்தில் 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |