குழந்தைகள் உட்பட 18 பேர் உடல்கருகி பலி! வெள்ள பாதிப்பில் தப்பித்தவர்களுக்கு நேர்ந்த சோகம்
வெள்ள பாதிப்பில் தப்பிய மக்கள் பேருந்து தீ விபத்தில் பலியான சோகம்
குழந்தைகள் உட்பட 18 பேர் பலியான நிலையில், காயமடைந்த 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பாகிஸ்தானில் பேருந்து ஒன்றில் தீப்பற்றிய விபத்தில் குழந்தைகள் உட்பட 18 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று பயணித்தது. அப்போது திடீரென பேருந்தில் தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். ஆனால் பேருந்து முழுவதும் தீ வேகமாக பரவியது.
இதனால் பதற்றமடைந்த பயணிகள் சிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தனர். எனினும் பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட குழந்தைகள் உட்பட 18 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியாகினர்.
social media
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். மேலும் படுகாயமடைந்த 28க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Pervez Masih / AP
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாகனத்தில் இருந்த குளிர்சாதன பகுதியில் கோளாறு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
EFE
மேலும், வெள்ள பாதிப்பில் மீட்கப்பட்ட மக்கள் கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPA PIC