எகிப்தில் 2,100 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு: வியப்பை தரும் புதிய தடயங்கள்!
எகிப்தில் 2,100 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2,100 ஆண்டுகள் பழமையான கோவில்
எகிப்தின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த ஆய்வில் மேலும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
லக்சோர் நகரிலிருந்து வடக்கு நோக்கி 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அத்ரிபிஸ் என்ற பகுதியில், ஒரு மலைக்குன்று அருகே 2,100 ஆண்டுகள் பழமையான ஒரு எகிப்திய பாரம்பரிய கோயில் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் டூபிங்கன் பல்கலைக்கழக எகிப்தியாலஜி பிரிவு தலைவர் கிறிஸ்டன் லீட்ஸ் கூறுகையில், இந்த கோயிலில் சிங்கத்தலை கொண்ட ஒரு தெய்வத்தின் சிலை மற்றும் கி.மு. 170 ஆம் ஆண்டு காலத்தில் ஆட்சி செய்த எட்டாவது டோலமி மன்னரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கர்ப்பம் குறித்த வேண்டுதல் தெய்வங்கள் இருந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன.
இன்னும் பெயரிடப்படாத இந்த 2100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில், நுழைவு வாயிலில் கோபுரங்கள் அமைந்துள்ளன.
மொத்தம் நான்கு விமானங்கள் கொண்ட இந்த கோயிலில், கூடுதல் அறைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு அடுக்கிற்கும் செல்லும் வழிகள் இருந்திருப்பது தெரியவருகிறது.
இந்தப் பழங்கால கோயில் கண்டுபிடிப்பு, எகிப்தின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை குறித்த புதிய பரிமாணங்களை திறந்து வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |