அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இந்தியாவில் துஷ்பிரயோகம் - ஒரு நபர் கைது
2 அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு துஷ்பிரயோகம்
2025 மகளிர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி, மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ரேடிசன் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், 2 அவுஸ்திரேலிய வீராங்கனைகள் வெளியே சென்று விட்டு, மீண்டும் அறைக்கு திரும்பும் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் அவர்களிடம் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
உடனடியாக வீராங்கனைகள் SOS அறிவிப்பை அனுப்பியதும், பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்ஸ், இதுதொடர்பாக MIG காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கைது
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அகீல் கான் என்ற நபரை கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நபர் கிரிக்கெட் வீராங்கனைகளை இரு சக்கர வாகனங்களை பின்தொடர்ந்ததோடு, அவர்களை தகாத முறையில் தொட்டு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |