இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் கொடுத்த பாலஸ்தீனியர்கள்? கொலைசெய்து கம்பத்தில் தொங்கவிட்ட ஆயுதக்குழு
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக பாலஸ்தீனியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் - இஸ்ரேல் போர்
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடந்து வருகிறது.
இதுவரை காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14,800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
Mahmud Hams / AFP
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் அளித்ததாக பாலஸ்தீனியர்கள் இருவர் ஆயுதமேந்திய குழுவால் தாக்கப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை
அவர்கள் இருவரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் (IDF) பணிபுரிந்ததாக அந்த வீடியோவில் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டு கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலை தளமாகக் கொண்ட i24 நியூஸ் என்ற ஊடகம், தன்னை 'எதிர்ப்பு பாதுகாப்பு' என்று அந்த அமைப்பு, ''எந்தவொரு தகவல் கொடுக்கும் நபர் அல்லது எந்த துரோகிக்கும் மன்னிப்பு கிடையாது என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் யார் ஈடுபட்டிருந்தாலும் நாங்கள் அவரை தாக்குவோம். அத்துடன் மரண தண்டனையும் அளிப்போம்' என தெரிவித்துள்ளனர்.
X/@Israel
எனினும் ஹமாஸ் அல்லது IDF மரணதண்டனை பற்றி முறையான அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |