கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து..20 பேர் பலியான பரிதாபம்
விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு பலமணி நேரம் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
காயமடைந்தவர்களில் மூன்று வயது சிறுமியும், எட்டு வயது சிறுவனும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொலம்பியாவில் நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் தென்மேற்கு துறைமுக நகரமான டுமாகோவிற்கும், காலி நகருக்கும் இடையே பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
குறித்த பேருந்து பனிமூட்டமான பகுதியின் வளைவில் இருந்து வெளியே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால் அப்பேருந்து விபத்துக்குள்ளானது. பான் - அமெரிக்க நெடுஞ்சாலையில் நடந்து இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
Leonardo Castro/AFP
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்பதால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்திருக்கும்' என தெரிவித்துள்ளனர்.
[
Leonardo Castro/AFP