உலக ரோபோக்கள் மாநாடு: மனித உருவ ரோபோக்களால் நெகிழ்ச்சியடைந்த பார்வையாளர்கள்
சீனாவில் நடைபெற்ற உலக ரோபோக்கள் மாநாட்டில் இடம்பெற்ற மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
உலக ரோபோக்கள் மாநாடு
உலக ரோபோக்கள் மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது, இதில் பலதரப்பட்ட ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
அதிலும் குறிப்பாக இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்த மனித உருவம் கொண்ட ரோபோக்கள் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது.
2023 World Robot Expo: A compelling tour of collaborating with robots pic.twitter.com/VGhJ0oqRJ1
— CGTN (@CGTNOfficial) August 16, 2023
புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருந்த இந்த ரோபோக்கள் மனிதர்களை போலவே பாவனைகளையும், அசைவுகளையும் வெளிப்படுத்தின.
இது குறித்து விளக்கிய ரோபோ தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் ரோபோட்ஸ், நுண்ணிய அசைவுகள் மற்றும் மூட்டுகளை மிக இயல்பாக அசைக்கும் வகையில் இந்த மனித ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ரோபோக்களின் கண் அசைவு, விரல் அசைவு, அத்துடன் மனிதர்களை ஒத்த தோற்றம் மற்றும் முக பாவனைகள் ஆகியவை ஆச்சரியம் அடையும் வகையில் இருப்பதாக பார்வையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |