2025 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு - எந்த நாட்டவருக்கு ?
1901 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு
மருத்துவம், இயற்பியல், வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2025 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரியை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கை (László Krasznahorkai) இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2025
The 2025 #NobelPrize in Literature is awarded to the Hungarian author László Krasznahorkai “for his compelling and visionary oeuvre that, in the midst of apocalyptic terror, reaffirms the power of art.” pic.twitter.com/vVaW1zkWPS
பயங்கரவாதத்தின் மத்தியில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் அவரது கவர்ச்சிகரமான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், தென் கொரியாவை சேர்ந்த ஹான் காங்(Han Kang) (53) என்ற எழுத்தாளர் தேர்வு செய்யப்பட்டார்.
வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் திகதி தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ10.41 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |