2025 உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்; அயர்லாந்து முதலிடம் - இந்தியாவின் நிலை தெரியுமா?
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியாகியுள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை Nomad Capitalist அமைப்பு வெளியிட்டுள்ளது.
விசா இல்லாத பயணம், வரிவிதிப்பு, உலகளாவிய பார்வை, இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் திறன், தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலை தயாரித்துள்ளது.
அயர்லாந்து முதலிடம்
199 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் 109 புள்ளிகளுடன் அயர்லாந்து முதல் முறையாக இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
வலுவான சர்வதேச நற்பெயர், வணிக வரிக் கொள்கைகள், குடியுரிமை நெகிழ்வுத்தன்மை காரணமாக அயர்லாந்து இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
108 புள்ளிகளுடன் ஸ்விட்சர்லாந்து மற்றும் கிரீஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது.
போர்ச்சுகல், மால்டா, இத்தாலி, லக்சம்பர்க், பின்லாந்து, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
148வது இடத்தில் இந்தியா
இந்த பட்டியலில், 47.5 புள்ளிகளுடன் இந்தியா 148வது இடத்தில் உள்ளது.
இதில், ஜேர்மனி 13வது இடத்திலும், பிரித்தானியா 21வது இடத்திலும், சிங்கப்பூர் 26வது இடத்திலும், கனடா 40வது இடத்திலும், அமெரிக்கா 45வது இடத்திலும், இலங்கை 128வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் கடைசியாக 199வது இடத்தில ஆப்கானிஸ்தான் உள்ளது. வட கொரியா 192வது இடத்திலும், பாகிஸ்தான் 192வது இடத்திலும், ஈராக் 196வது இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |