மத்திய தரைக்கடல் பகுதியில் தொடரும் அவலம்: 2023 ல் இதுவரை 289 குழந்தைகள் உயிரிழப்பு
289 குழந்தைகள் இந்த ஆண்டு மத்திய தரைக்கடலை கடக்க முயன்ற போது உயிரிழந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் தகவல் தெரிவித்துள்ளது.
289 குழந்தைகள் உயிரிழப்பு
2023ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் கிட்டத்தட்ட 289 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதியை கடந்து ஐரோப்பாவிற்கு குடியேற முயன்று உயிரிழந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது 2022ம் ஆண்டின் முதல் பாதியை ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பு UNICEF தெரிவித்துள்ளது.
மேலும் ஐரோப்பாவில் பாதுகாப்பை தேடி வரும் குழந்தைகளுக்கு விரிந்த பாதுகாப்பு, சட்டபூர்வ மற்றும் அணுகக்கூடிய பாதைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
Xinhua/Marios Lolos
UNICEF-வின் புலம்பெயர் மற்றும் இடம்பெயர்வு பிரிவின் தலைவர் வெரீனா க்னாஸ் வழங்கிய தகவலில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உண்மையான புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
UNICEF அறிக்கையின் படி, பாதுகாப்பு, அமைதி மற்றும் சிறந்த வாய்ப்புகளாக மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயற்சிக்கும் குழந்தைகளில் ஒவ்வொரு வாரமும் 7 பேர் உயிரிழக்கிறார்கள் அல்லது காணாமல் போய் விடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியை கடந்தவர்களின் புள்ளிவிவரம்
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடந்தவர்களின் எண்ணிக்கை 11,600 ஆகும், இது 2022ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது.
CREDIT: Olmo Calvo/AP
2023 ன் முதல் மூன்று மாதத்தில் 3,300 குழந்தைகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்து உள்ளனர், இவற்றில் 71 சதவீத குழந்தைகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் குடிபெயர்ந்து உள்ளனர்.
இந்த குழந்தைகள் தாங்கள் தனியாக இல்லை என்பதை உணர வேண்டும், இதற்கு உலக தலைவர்கள் விரைவாக செயல்பட்டு உரிய பயனுள்ள தீர்வுகளை தேடுவதில் உறுதியாக நிற்க வேண்டும் என வெரீனா க்னாஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |