மண்ணை கவ்விய இந்திய அணி! 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
இந்திய அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
2வது ஒருநாள் போட்டி
இந்தியா-இலங்கை இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவின் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில், நிசங்கா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ (Avishka Fernando) மற்றும் குசால் மெண்டிஸ் (Kusal Mendis) கூட்டணி 74 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து குசால் மெண்டிஸ் 30 (42) ஓட்டங்கள் எடுத்திருந்த போது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் LBW ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த சமரவிக்ரமா 14 ஓட்டங்களிலும், கேப்டன் சரித் அசலங்கா 25 ஓட்டங்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
இறுதியில், துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்கள் குவிக்க உதவிகரமாக இருந்தனர்.
இலங்கை அபார வெற்றி
240 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் 64 ஓட்டங்களும், சுப்மன் கில் 35 ஓட்டங்களும் குவித்து வாண்டர்சே(Vandersay) பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
பிரித்தானியாவில் வெடிக்கும் கலவரம்: பொலிஸார் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்த குடியேற்ற எதிர்ப்பாளர்கள்!
பின்னர் வந்த விராட் கோலி 14 ஓட்டங்கள், சிவம் துபே 0 ஓட்டங்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 7 ஓட்டங்கள், கே.எல் ராகுல் 0 ஓட்டங்கள் என சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
அக்சர் படேல் மட்டும் தனியாக போராடி 44 ஓட்டங்கள் குவித்து அசலங்கா பந்துவீச்சில் வெளியேறினார்.
இறுதியில் 42.2 ஓவர்கள் இந்திய அணியால் 10 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |