பசிபிக் கடலில் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்திற்குரிய படகு: அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதல்
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டாவது படகை அமெரிக்க படை தாக்குதல் நடத்தியுள்ளது.
போதைப்பொருள் படகு மீது தாக்குதல்
பசிபிக் கடல் வழியாக கடத்தப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்காக அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் புதன்கிழமை பசிபிக் கடலில் நடத்தப்பட்ட தாக்குதலில், போதைப்பொருள் கப்பலில் இருந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்தில் போதை பொருள் ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்படும் இரண்டாவது கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் அமெரிக்க பாதுகாப்பு படைக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் பீட் ஹெக்ஸ்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு கப்பல்களும் சர்வதேச கடல் பிராந்தியத்தை கடந்து போதைப் பொருள் கடத்தியதாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |