இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறார்களின் எண்ணிக்கை: நடுங்க வைக்கும் தரவுகள்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களில், இதுவரை 3,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்கள்
காஸாவின் சுகாதார அமைச்சரகம் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல், குறிதவறிய ராக்கெட்டுகள் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சிறார்கள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் பச்சிளம் குழந்தைகள், பிஞ்சு சிறுவர்கள், மாணவர்கள் என பல தரப்பினர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காஸா பகுதியில் குடியிருக்கும் 2.3 மில்லியன் மக்களில் பாதி அளவுக்கு 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.
இதில், சிறார்களில் 40 சதவீதம் பேர்கள் கடந்த 25 நாட்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில் 12 வயதுக்கு உட்பட்ட 2001 சிறார்களும் 3 வயதும் அதற்கு உட்பட்ட சிறார்கள் 615 பேர்களும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் ஹமாஸ் படைகளை மட்டுமே தாங்கள் குறிவைத்துள்ளதாகவும், ஹமாஸ் படைகள் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.
3,600க்கும் மேற்பட்ட சிறார்கள்
அத்துடன், இதுவரை ஹமாஸ் படைகளின் 500 ராக்கெட்டுகள் குறிதவறி காஸா பகுதியிலேயே விழுந்துள்ளதாகவும், அதில் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
@ap
மட்டுமின்றி, கடந்த மூன்று ஆண்டுகளில் உலகில் நடந்த அனைத்து மோதல்களையும் விட, காஸாவில் மூன்று வாரங்களுக்குள் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.
அதாவது, கடந்த ஆண்டு முழுவதும் இரண்டு டசின் போர் மண்டலங்களில் 2,985 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் காசா பகுதியில் மட்டும் கடந்த 25 நாட்களில் 3,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |