நீர்யானை வாய்க்குள் சிக்காமல் நூலிழையில் தப்பிய 3 சிறுவர்கள்: வைரல் வீடியோ
தண்ணீரில் குளித்து விளையாடி கொண்டிருந்த 3 சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக நீர்யானையின் வாயில் சிக்கி கொள்ளாமல் உயிர் தப்பிக்கும் வீடியோ இணையத்தில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது.
உயிர் தப்பிய 3 சிறுவர்கள்
தண்ணீரில் இருக்கும் மனிதர்கள் முதலைகள், சுறாக்கள் மற்றும் பிற ஊர்வன விலங்குகளுடன் மோதிக் கொள்ளாமல் இருக்க எச்சரிக்கப்படுவார்கள்.
ஆனால் தற்போது சமூக ஊடகமான ட்விட்டரில் பரவும் வீடியோ ஒன்றில், மூன்று சிறுவர்கள் தண்ணீரில் நீந்தி விளையாடி கொண்டு இருக்கும் போது நீர்யானை ஒன்று அவர்களுக்கு மிக அருகில் தண்ணீரில் இருந்து வெளியே தோன்றுகிறது.
No one expects the Hippo. pic.twitter.com/DExoVI8ZQG
— Terrifying Nature (@TerrifyingNatur) May 14, 2023
அதிர்ஷ்டவசமாக எந்தவொரு காயங்களும் இல்லாமல் உயிர் தப்பிய 3 சிறுவர்கள் உடனடியாக தண்ணீரில் இருந்து வெளியே ஓடுகின்றனர்.
இதனை வீடியோவாக பதிவு செய்த நபரும், அந்த இடத்தை விட்டு வேகமாக தப்பித்து ஓடுவதை வீடியோவின் அதிர்வுகளை கொண்டு உணரமுடிகிறது.
மீண்டும் பரவும் வீடியோ
ஆப்பிரிக்காவில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை கடந்த 2021ம் ஆண்டு சான்வைல்ட் சரணாலயம் அவர்களுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது.
Cameron Spencer/Getty Images Europe/Getty Image
மேலும் அதில் குறிப்பிட்டு இருந்த தகவலில், அதிர்ஷ்டவசமாக 3 சிறுவர்களும், நீர்யானையும் எதிரெதிர் திசையில் பிரிந்து சென்றனர் என தெரிவித்து இருந்தது.
இந்த வீடியோ தற்போது மீண்டும் இரண்டு வருடங்களுக்கு பிறகு சமூக ஊடகமான ட்விட்டரில் பரவி வருகிறது.
நீர்யானைகளுக்கு மனித உடலை இரண்டாக பிரிக்கும் அளவிற்கான 1,800 PSI கடிக்கும் தன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.