ஆப்பிரிக்க நாடொன்றில் படகு கவிழ்ந்து 3 இந்தியர்கள் மரணம், 5 பேர் மாயம்
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மொசாம்பிக்கின் மத்திய பகுதியில் உள்ள பெய்ரா துறைமுகத்தில், ஒரு எண்ணெய் டேங்கரைச் சேர்ந்த குழுவினரை கடலில் உள்ள கப்பலுக்கு கொண்டு செல்லும் பொது, அவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என மொசாம்பிக்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரப்படி) நடந்ததாக கூறப்படுகிறது.
படகில் மொத்தம் 14 இந்தியர்கள் இருந்தனர். சிலர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தற்போது பெய்ரா நகர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீதமுள்ள 5 பேர் குறித்து தெடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்திய தூதரகம் அதன் X பக்கத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. "இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை வழங்கிவருகிறது" என பத்துவிட்டுள்ளது.
Boat accident: Search and rescue efforts are underway. Mission is coordinating with local authorities regarding the missing 5 Indians.
— India in Mozambique (@IndiainMoz) October 17, 2025
For any update & information, Mission can be reached at following emergency nos:
+258-870087401 (m)
+258-821207788 (m)
+258-871753920 -WhatsApp pic.twitter.com/NOou16t9xe
தூதரகத்தின் அதிகாரி ஒருவர் பெய்ரா வைத்தியசாலைக்கு நேரில் சென்று, உயிர் தப்பிய இந்தியரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த சம்பவம் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mozambique boat accident Indians, Indian crew members dead Mozambique, Beira port boat capsized, Indian nationals missing Mozambique, Mozambique tanker crew tragedy, Indian High Commission Mozambique, Boat mishap off Beira coast, Search rescue Mozambique Indians, Indian sailors accident Africa, Consular help Mozambique accident