புலம்பெயர முயன்ற இந்திய தம்பதியர் குழந்தையுடன் வெளிநாடொன்றில் கடத்தல்
போர்ச்சுகல் நாட்டுக்கு புலம்பெயர முயன்ற ஒரு இந்திய தம்பதியரும், அவர்களுடைய மூன்று வயதுக் குழந்தையும் லிபியா நாட்டில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தம்பதியர் குழந்தையுடன் கடத்தல்
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Mehsana மாவட்டத்தில் அமைந்துள்ள Badalpura கிராமத்தைச் சேர்ந்த கிஸ்மத்சிங் (Kismatsingh Chavda), அவரது மனைவியான ஹீனாபென் (Heenaben) மற்றும் தம்பதியரின் மகளான தேவன்ஷி என்னும் மூன்று வயது சிறுமி ஆகியோரே கடத்தப்பட்டுள்ளதாக, (Devanshi). Mehsana மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

லிபியா நாட்டில் அவர்களைக் கடத்தி வைத்துள்ள கும்பல், அவர்களிடம் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிஸ்மத்தின் சகோதரர் போர்ச்சுகல் நாட்டில் வாழும் நிலையில், அங்கு புலம்பெயர கிஸ்மத் குடும்பம் முடிவு செய்துள்ளது.
கிஸ்மத் குடும்பம், நவம்பர் மாதம் 29ஆம் திகதி குஜராத்திலிருந்து துபாய்க்கும், பின் துபாயிலிருந்து லிபியாவுக்கும் சென்ற நிலையில், Benghazi என்னுமிடத்தில் அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.
குஜராத் அரசுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் இந்த கடத்தல் தொடர்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக Mehsana மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |