இளம்பெண் சிறுநீரகத்தில் இருந்த 300 கற்கள்: மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்
தைவானில் இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து 300 கற்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
சிறுநீரக கற்கள்
தைவானை சேர்ந்த 20 வயதான சியா யூ(Xiao Yu ) என்ற இளம் பெண், கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் தீவிர முதுகுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில், இளம் பெண்ணின் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ETtoday
கற்களின் தன்மை மற்றும் அளவினை அறிந்து கொள்வதற்காக மருத்துவர்கள் சி.டி ஸ்கேன் செய்து பார்த்த போது சியா யூ-வின் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் 5 மி.மீ முதல் 2 செ.மீ வரை இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் அவருக்கு வெள்ளை ரத்த அணுக்கள் அதிகமாக இருப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் சியா யூ-வின் சிறுநீரகத்தில் இருந்து 300 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ETtoday
தண்ணீர்க்கு பதில் டீ
அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு, சியா யூ தற்போது வீடு திரும்பியுள்ளார். மேலும் மருத்துவர்கள் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சியா யூ-வின் இந்த சிறுநீரக கற்கள் பாதிப்புக்கு அவர் தண்ணீருக்கு பதிலாக அதிகம் பபிள் டீ குடித்ததே காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
bubble tea(Getty)
உலகளவில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த மெஸ்ஸியின் இண்டர் மியாமி: இந்திய கிரிக்கெட் அணி பிடித்துள்ள இடம்?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |