போருக்கு மத்தியில் ரஷ்யாவிலிருந்து 31 குழந்தைகளை மீட்ட உக்ரைன்! வெளியான காணொளி
ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 31 உக்ரைன் குழந்தைகள் மீண்டும் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
31 உக்ரைன் குழந்தைகளை போராடி மீட்ட தொண்டு நிறுவனம்
ரஷ்யா-உக்ரைன் போரின்போது, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களிலிருந்து குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. Save Ukraine தொண்டு அமைப்பின்படி, குழந்தைகள் நாட்டின் வடகிழக்கு பகுதியான கார்கிவ் மற்றும் தெற்கு பகுதியான கெர்சனிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
சமூக ஊடகங்களில், சேவ் உக்ரைன் தொண்டு அமைப்பின் தலைவர் மைகோலா குலேபா, "இன்று ரஷ்யர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட மேலும் 31 குழந்தைகளை நாங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம்" என்று கூறினார்.
SaveUkraine
உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சட்டவிரோதமாக நாடு கடத்துவதற்கு எதிராக போராடும் சேவ் உக்ரைன் தொண்டு நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட குழந்தைகளும் அவர்களது உறவினர்களும் கீவ் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
தொண்டு நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகள், குழந்தைகள் பேருந்திலிருந்து இறங்குவதையும், சேவ் உக்ரைன் பிரதிநிதிகளால் வரவேற்கப்படுவதையும் காட்டுகிறது.
மனதைக் கவரும் வீடியோவை இங்கே பாருங்கள்:
SaveUkraineСhildren abducted by Russians from the Kherson and Kharkiv regions have been reunited with their families after several months of separation. They are now safe but in need of psychological and physical recovery.
— Save Ukraine (@SaveukraineUs) April 7, 2023
Follow the updates?? pic.twitter.com/dXGN5FTHp9
புடினுக்கு கைது வாரண்ட்
உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, 16,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டதாக கீவ் கூறுகிறது. மாஸ்கோ இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், உக்ரேனிய குழந்தைகளை போரின் கொடூரங்களிலிருந்து காப்பாற்றியதாக கூறுகிறது.
எவ்வாறாயினும், கடந்த மாதம் உக்ரேனிய குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக எழுந்த போர்க்குற்ற குற்றச்சாட்டின் பேரில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு வாரண்ட் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஜனாதிபதி மரியா லவோவா-பெலோவாவுக்கும் வழங்கப்பட்டது.