துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதி - பாலம் சரிந்து விழுந்து 32 பேர் உயிரிழப்பு
சுரங்கத்தின் பாலம் சரிந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோபால்ட் சுரங்கம்
மின்சார வாகனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் பேட்டரிகளில் முக்கிய அங்கமாக இருக்கும் கோபால்டை உலகளவில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ முன்னணியில் உள்ளது.

இந்த உற்பத்தியில், 90 சதவீதத்தை சீன நிறுவனங்கள் கட்டுப்படுத்துகிறது.
தென்கிழக்கு காங்கோவின் லுவாலாபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 15 ஆம் திகதி, அங்கே பாதுகாப்பிற்கு இருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது.
32 பேர் உயிரிழப்பு
இதனால் பீதியடைந்த தொழிலாளர்கள், சுரங்கத்தில் பாலம் ஒன்றின் வழியாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
Absolutely terrifying – a massive landslide at an artisanal mine has reportedly killed at least 80 people. November 15, 2025
— Weather Monitor (@WeatherMonitors) November 16, 2025
📍Kawama, Lualaba Province, Democratic Republic of the Congo (DRC).🇨🇬 pic.twitter.com/xfLZgy8Pg3
ஓடிவந்த கூட்டத்தின் திடீர் அழுத்தம் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, பாலம் சரிந்துள்ளது. இதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சுரங்கத்தின் சுற்றுச்சுவர் சரிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |