கிரீஸ் நாட்டில் ரயில் மோதி 32 பேர் பலி! 85 பேர் காயம்
கிரீஸில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதியதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் 32 பேர் பலியாகியதுடன் குறைந்தது 85 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
குறித்த பல பயணிகள் ரயில் பெட்டிகளின் ஜன்னல்களின் வழியாக தூக்கி வீசப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.
பெரிய நெடுஞ்சாலை மற்றும் இரயில் சுரங்கப்பாதைகள் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள தண்டவாளத்திற்கு அடுத்துள்ள ஒரு வயலில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் குறைந்தது 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் இருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்த விபத்திற்கு காரணம் இன்னும் தெரியவில்லை. ஆகவே இரண்டு ரயில் அதிகாரிகளையும் பொலிசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.