மனைவி தன்னை பிரிய முடிவு செய்ததால் இலங்கையர் எடுத்த கொடூர முடிவு
தன் மனைவி தன்னை பிரிய முடிவு செய்ததால், அவரை கொடூரமாக கொலை செய்த இலங்கையருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவரை பிரிய முடிவு செய்த மனைவி
தனது 10 வயதில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர் Nelomie Perera (43).
Nelomieயின் கணவரான Dinush Kureraவும் இலங்கையில் பிறந்தவர்தான். தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உட்பட மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
Dinush அடிக்கடி பிசினஸ் விடயமாக இலங்கைக்கு செல்வதுண்டாம்.
இந்நிலையில், Dinushஐ வேறொரு பெண்ணுடன் பார்த்ததாக பலர் Nelomieயிடம் கூறியிருக்கிறார்கள்.
தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான உறவு இருப்பது தெரியவந்ததால் அவரைப் பிரிய முடிவு செய்துள்ளார் Nelomie.
ஆனால், ஏற்கனவே பலமுறை Dinushஆல் தாக்கப்பட்டதால் அச்சத்திலிருந்த Nelomie, கணவர் இலங்கைக்குச் சென்றிருந்த நேரத்தில் நீதிமன்றத்தை அணுகி, அவர் தன் வீட்டுக்குள் நுழைய தடை உத்தரவு வாங்கியுள்ளார்.
கணவரின் பொருட்களை எல்லாம் கேரேஜில் வைத்துவிட்டு, எனக்கு விவாகரத்து வேண்டும், இனியும் பயந்துகொண்டே உங்களுடன் வாழமுடியாது என கணவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் Nelomie.
கணவர் எடுத்த கொடூர முடிவு
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பியுள்ளார் Dinush.
அவர் விமான நிலையம் வந்திறங்கியதுமே வீட்டுக்குச் செல்ல தடை குறித்த நீதிமன்ற உத்தரவு அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த Dinush, 3ஆம் திகதி, கடைக்குச் சென்று ஒரு கோடரி உட்பட சில பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் வீட்டுக்குச் சென்று வீட்டின் பின்புற வேலி வழியாக உள்ளே நுழைந்து அங்கேயே காத்திருந்திருக்கிறார்.
இரவு 11.00 மணிக்கு, Nelomie சிகரெட் பிடிப்பதற்காக வீட்டுக்குப் பின்னால் சென்றுள்ளார்.
காத்திருந்த Dinush, கோடரியால் மனைவியை சரமாரியாக தாக்க, அவரது கூக்குரல் கேட்டு ஓடிவந்த பிள்ளைகள் தங்கள் தாயை தாக்கவேண்டாம் என கதறியும், பிள்ளைகள் தடுத்தும் கேட்காமல், 14 நிமிடங்கள் விடாமல் மனைவியைத் தாக்கியுள்ளார் Dinush.
தடுத்த மகனுக்கும் அடி விழுந்துள்ளது. பின்னர் ஒரு கத்தியை எடுத்து சரமாரியாக மனைவியைக் குத்தியுள்ளார் Dinush.
அவர் தன் மீது படிந்த இரத்ததைக் கழுவுவதற்காக குளியலறைக்குச் செல்ல, பிள்ளைகள் ஓடிச் சென்று பக்கத்து வீடுகளில் உதவி கோரியுள்ளார்கள்.
ஆனால், மருத்துவ உதவிக்குழுவினர் வந்தும் Nelomieயைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
Dinush கைது செய்யப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு, நீதிமன்றத்தில் தன் மனைவி தன்னைத் தாக்கியதாகவும், தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காகவே தான் திருப்பித் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், ஏற்கனவே அவர் Nelomieயை தாக்கியது குறித்து அறிந்ததுடன், பிள்ளைகளின் வாக்குமூலத்தையும் கேட்ட நீதிபதி Dinushக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Dinushஆல், 30 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வெளியே வரவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |