இது முதல் முறையல்ல.., போலிச் சான்றிதழ்கள் கொடுத்து வேலை வாங்கிய 4 ஆசிரியர்கள் பணிநீக்கம்
போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வேலை வாங்கியதாக 4 ஆசிரியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போலிச் சான்றிதழ்கள்
இந்திய மாநிலமான ஒடிசாவில் போலிச்சான்றிதழ்கள் மூலம் அரசுப் பணியிடங்களில் பலர் வேலைக்கு சேர்ந்ததாக புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, பூரியில் உள்ள சர்ச்சிகா யுஜியுபி பள்ளியில் பணிபுரிந்த உதவி ஆசிரியர் நந்த கிஷோர் சேத்தி, ஓரா சிபிஎஸ்சி பள்ளியில் பணிபுரிந்த உதவி ஆசிரியர் சௌதாமினி பிரதான், பிரிபாதர் அரசு பிபிஎஸ்ஸைச் சேர்ந்த உதவி ஆசிரியர் சுரேஷ் சந்திர பால், கிரிசாஹி திட்ட தொடக்கப் பள்ளியின் உதவி ஆசிரியர் சத்யசுந்தர் பிஸ்வால் ஆகியோர் போலிச்சான்றிதழ்கள் கொடுத்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் மீது ஆசிரியர் வேலை பெறுவதற்காக போலி சான்றிதழ்களை சமர்பித்ததாக கடந்த 2022 -ம் ஆண்டு காவல் துறை குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் இவர்களது சான்றிதழ்களை மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) உதவியுடன் குற்றப்பிரிவு பொலிஸார் சரிபார்த்தனர். அப்போது, போலிச்சான்றிதழ் எனக் கண்டறியப்பட்டது.
பணிநீக்கம்
இதன்பின்னர், போலிச்சான்றிதழ்கள் கொடுத்த 4 ஆசிரியர்களையும் ஒடிசா அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இருந்தாலும், ஒடிசாவில் போலிச்சான்றிதழ்கள் கொடுத்து அரசு வேலைக்கு சேருவது இது முதல் முறையல்ல.
முன்னதாக, கடந்த ஆண்டு போலிச்சான்றிதழ்கள் கொடுத்ததற்காக 4 ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். அதேபோல, போலங்கிரில் போலிக் கல்விச் சான்றிதழ்களை அளித்த 4 ஆசிரியர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |