தேர்வுக்கு பிறகான கொண்டாட்டத்துக்கு சென்ற 3 இளம்பெண்கள்: செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம்
அயர்லாந்தில் தேர்வு முடிவுகளுக்கு பிறகான கொண்டாட்டத்துக்கு சென்ற 4 இளைஞர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
4 இளைஞர்கள் பலி
அயர்லாந்தில் தேர்வு முடிவுகளுக்கு பிறகான கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக 24 வயதுடைய சகோதரர் லூக் மெக்ஸ்வீனி அவருடைய இளைய சகோதரி கிரேஸ் மெக்ஸ்வீனி(18) மற்றும் அவளது இரண்டு நண்பர்கள் நிக்கோல் மர்பி(18) மற்றும் ஜோய் காஃபி(18) ஆகிய நான்கு பேர் காரில் நேற்று சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்த கார், மாலை 7.30 மணியளவில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது, இதில் காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணையின் போது காரில் பயணித்த 3 இளம்பெண்களும் தேர்வுக்கு பிறகான கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இந்த விபத்தில் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
வரும் நாட்களில் பிரேத பரிசோதனை
இது தொடர்பாக பேசிய கார்டா செய்தித் தொடர்பாளர், விசாரணை தொடங்கி இருப்பதாகவும் வரும் நாட்களில் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஆறுதல் தெரிவிக்கப்பட்டு வருகிறது, அத்துடன் விசாரணை குறித்த புதுப்பிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |