சவுதி அரேபியாவில் 4000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு: சுவாரஸ்யமான தகவல்
சவுதி அரேபியாவில் 4000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4000 ஆண்டுகள் பழமையான நகரம்
சவுதி அரேபியாவின் வடமேற்கில், 4,000 ஆண்டுகள் பழமையான ஒரு கோட்டை நகரத்தின் எச்சங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடுமையான பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான கைபர் சோலையில்(Khaybar oasis) அல்-நாதா நகரம் மறைந்து இருந்த நிலையில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
அல்-நாதா(al-Natah) நகரம், நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு மாறிய காலகட்டத்தின் கவர்ச்சிகரமான பார்வையை வழங்குகிறது.
பிரான்ஸ் தொல்லியல் ஆராய்ச்சியாளர் Guillaume Charloux தலைமையிலான குழு, குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள 14.5 கிலோமீட்டர் நீளமுள்ள சுவரைக் கண்டுபிடித்துள்ளது.
PLOS One இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றத்தின் இந்த உறுதியான சான்று, ஆரம்ப வெண்கல யுகத்தின் (கிமு 2400) சமூக மற்றும் கட்டடக் கலை முன்னேற்றங்களை வெளிப்படுத்துகிறது.
மக்கள் தொகை
@RCU_SA announces a significant archaeological discovery in the oasis of #Khaybar, which challenges longstanding perceptions of pastoral conditions during the Bronze Age. This groundbreaking discovery, originating from the town of #AlNatah, is the first of its kind in the region… pic.twitter.com/zMRiiV6fP3
— الهيئة الملكية لمحافظة العلا (@RCU_SA) November 2, 2024
அல்-நாதா(al-Natah) நகரத்தில் சுமார் 500 பேர் வரை வசித்து இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆய்வு முடிவுகள் அல்-நாதா(al-Natah) நகரம் கிமு 2400-2000 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட 2.6 ஹெக்டேர் பரப்பளவுள்ள கோட்டை நகரம்" என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |