ஆசிய நாடொன்றில் தனித்து வசிக்கும் மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஆசிய நாடான ஜப்பானில் தனித்து வசித்து வந்த மக்களில் கிட்டத்தட்ட 40,000 பேர்கள் ஆதரவின்றி தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனித்து வசித்து வந்த
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த இறப்புகள் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 4,000 பேர் இறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர்.
மேலும் 130 உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வருடமாக கவனிக்கப்படாமல் போயின. ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின் அடிப்படையில், ஜப்பான் தற்போது உலகின் அதிக முதியவர்கள் மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடாக உள்ளது.
ஆண்டு பிறந்து முதல் 6 மாதங்களில் தனித்து வசித்து வந்த மக்களில் 37,277 பேர்கள் தங்கள் குடியிருப்புகளில் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 70 சதவிகிதம் என்றே கூறப்படுகிறது.
10.8 மில்லியனை எட்டும்
வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவிகிதம் பேர் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இறந்த ஒரு மாதத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 3,939 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
130 சடலங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு குறைந்தது ஒரு வருடமாவது கவனிக்கப்படாமல் இருந்தது. இதில் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 7,498.
இதனிடையே அரசு நிறுவனம் ஒன்று முன்னெடுத்த ஆய்வில் 2050க்குள் தனித்து வாழும் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 10.8 மில்லியனை எட்டும் என்றே கண்டறியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |