உத்தரகாண்ட் சுரங்கத்தில் 10 நாள்களாக சிக்கிய 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது முதல் வீடியோ
இந்திய மாநிலம், உத்தரகாண்டில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள முதல் வீடியோ வெளியாகியுள்ளது.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அங்கு, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே மூடியது. இதனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர்.
இவர்களை மீட்கும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு தேவையான உணவு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும், அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக குழாய் வழியாக கேமராவும் அனுப்பப்பட்டது.
முதல் வீடியோ
இந்த கேமரா மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை படம் பிடித்து அனுப்பப்பட்டது. இந்த வீடியோ மூலம் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | First visuals of the trapped workers emerge as the rescue team tries to establish contact with them. The endoscopic flexi camera reached the trapped workers. pic.twitter.com/5VBzSicR6A
— ANI (@ANI) November 21, 2023
மேலும், அவர்கள் குழாய் மூலம் அனுப்பப்பட்ட உணவை பகிர்ந்து உண்கின்றனர். இந்த வீடியோவை பார்த்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel collapse: Rescue workers try to establish contact with the trapped workers through walkie-talkie.
— ANI (@ANI) November 21, 2023
(Video Source: District Information Officer) pic.twitter.com/eGpmAmwQep
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |