16 வயது சிறுவனை கணவனாக்கிய 41 வயது பெண்: தோழியின் மகனுடன் காதல் திருமணம்
இந்தோனேசியாவில் தோழியின் 16 வயது மகனை 41 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 வயது சிறுவனை திருமணம் செய்த 41 வயது பெண்
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனைச் சேர்ந்த 41 வயதான மரியானா என்ற பெண், 16 வயதுடைய கெவின் என்ற சிறுவனுடன் சிறு வயது முதலே பழகி வந்துள்ளார்.
இதற்கிடையே 16 வயது சிறுவன் கெவினின் தாயாரான லிசாவுடனும் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் நெருக்கம் உள்ள தோழியாக மரியானா பழகி வந்துள்ளார்.
மரியானா மற்றும் லிசா ஆகிய இருவரின் வீடுகளும் அருகருகில் அமைந்து இருக்கும் நிலையில், லிசாவின் 16 வயது மகன் கெவின் மீது மரியானாவுக்கு காதல் மலர்ந்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக தன்னை விட 25 வயது குறைவான சிறுவன் கெவினை மரியானா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மரியானாவிடம் நிறைய சொத்துக்கள் இருப்பதால் கெவினின் தாயார் லிசாவும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார், அத்துடன் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சிறுவன் கெவினின் முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்று இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது, அதே சமயம் சொத்துக்காக தனது மகன் கெவினை மரியானாவுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதாக கிளம்பும் வதந்தியை முற்றிலும் மறுப்பதாக சிறுவனின் தாயார் லிசா தெளிவுபடுத்தியுள்ளார்.
மரியானாவை விவாகரத்து செய்ய லிசா அறிவுறுத்தல்
இந்தோனேசியாவை பொறுத்தவரை 19 வயதில் ஆணும் பெண்ணும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம்.
அதே சமயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தோனேசியாவில் 21 வயது நிறைவடையும் போது பெற்றோரின் சம்மதம் இல்லாமலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் கெவினுக்கு 16 வயதே நிறைவடைந்து இருப்பதால் மரியானா மீது மைனர் சிறுவனை திருமணம் செய்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கெவின் தாயார் மரியானா-வை தற்போது விவாகரத்து செய்து விடுமாறு அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |